அன்பிற் சிறந்தவனே!
உன் வாழ்வின் முதல் படி..
ஒப்பனை போட்டு நடித்தாய்
திரையுலகில் ஓர் இடம் பிடித்தாய்


அடுத்தபடி...
அனைவர்க்கும் நல்லவராக
அரசியலில் புகழ் பெற்றாய்.


நாலு பேருக்கு நல்லது செய்தாய்
நாலு பேரும் உனக்கு நல்லது செய்தனர்
இப்படி.. கணினி வியாபாரத்திலும்
வெற்றி பெற்றாய்


படிப்படியாக வெற்றி பெறும் வித்தகனே!
வரலாற்று நெப்போலியன் மாவீரன்
வரலாறு படைக்கும் நீயோ மாமனிதன்


கணினியில் கணக்கிட்டாலும்
உன் நட்பு வட்டாரம்
தொடங்கும் இடம் தெரியுமே தவிர
முடியும் இடம் தெரியாது


உயர்ந்த மனிதனே!
உருவத்தால் மட்டுமல்ல
உள்ளத்தாலும் உயர்ந்தவன் நீ..


உன் நண்பனைச் சொல்
உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பார்கள்


என் நண்பன் நெப்போலியன்
சொல்வதில் கர்வப்படுகிறேன்
நீ வெல்வதில் பெருமைப்படுகிறேன்