Peers Voice

Thiru.K.M.Arangan speaks about Nepoleon

தி.மு.க.-வில் உறுதிமிக்க கல்தூணே - தமிழ்த்
திரையுலகில் பவனிவரும் கவரிமானே

மாவீரன் நெப்போலியன் என்றாலே - எங்கள்
மனதினிலே தேன்சொட்டும் தன்னாலே

முகத்திலுள்ள முறுக்குமீசை வாளாகும் - நீ
முரசொலித்தால் எதிரிபடை தூளாகும்

கழகத்தை உயிராக மதிப்பவரே - தலைவர்
கலைஞரைத்தன் கடவுளாக துதிப்பவரே

கட்டுப்பாட்டை மனதுக்குள் கட்டிப்போட்டு -
என்றும் கண்ணியமாய் கடமையாற்றும் தங்கச்சீட்டு

மணிக்கணக்கில் மார்த்தட்டி வாதிடுவாய் - மண்ணில்
மனிதநேயம் வேர்விடவே நீர்விடுவாய்

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியிலே - வென்று
வலம்வந்து உயரச்செய்தாய் தகுதியிலே

உருவம்போல் உள்ளம்கூட உயர்ந்திருக்கு - என்றும்
உதவுவதில் பாரிவள்ளல் பெயர் உனக்கு

அனைவரையும் வசீகரிக்கும் சிரித்த முகம் - என்றும்
அன்புகாட்டி அரவணைக்கும் பரந்த அகம்

அமைச்சரான கே.என். நேரு உனக்கு மாமா - மீசையை
ஆளுக்காளு குத்தகையை எடுக்கலாமா

நடிப்பினிலே சூரியனாய் ஒளிர்கின்றாய் - நாட்டு
நடப்பினிலே மக்களிடம் மிளிர்கின்றாய்

இரு வண்ணக் கொடி காக்கும் தொண்டன் நீ -நம்
இயக்கத்தில் எல்லோர்க்கும் நண்பன் நீ

தளபதியார் மனவானின் வளர்பிறையே - கழகத்
தொண்டர்கள் இளைப்பாறும் கடற்கரையே

சீண்டிவிட்டால் சீறிப்பாயும் சிங்கம் நீ - ஆனால்
சீவலப்பேரி நாயகன்போல் தங்கம் நீ

காற்றுமழை புயல் கடந்து கரையேறும் - அந்த
கப்பல் தான் நம் தலைவர் கலைஞராகும்

அய்ந்தாம் முறை தமிழகத்தை ஆட்சிபுரியும் - முத்தமிழ்
அறிஞருக்கு தம்பியாக துணைபுரியும்

இலட்சியத்தில் வெறிகொண்ட நெப்போலியனே - நம்
இயக்கத்தில் முன்னோடியாய் வளர்க வாழ்க !

©2018 Actor Nepoleon. All Rights Reserved. Designed By Jeevan Technologies