ஈரநெஞ்சன் எனது நண்பன்

அடிவானைத் தாண்டும் உன்
தொழில் வளர்ச்சி
நீளம்!


அதன் அடித்தளமாய் இருந்துனது
நேர்மையதே ஆளும்!


நீ பாட மாநாடு
ஆர்ப்பரித்து மகிழும்!


அதை பார்த்து உன் தலைமை
தாயாகி நெகிழும்!


இயல்பான நடிப்பிற்கு
நீ எடுத்துக்காட்டு!


அதில் இன்னும் நீ
ஈடுபட்டு
விருது பல ஈட்டு!


நட்புக்கு நீ இன்றும்
புது நெல்லு
புது நாத்து!


உன்
இணைய தள
நுழைவுக்கு
என் இனிய
தமிழ்
வாழ்த்து!
வாழ்த்து!